fbpx

ரேஷன் அட்டைதாரர்களே..!! ஏமாந்துறாதீங்க..!! இந்த 2 நாட்களும் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

நவம்பர் 13 மற்றும் 25ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் வகையில் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி வேலை நாட்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த இரு வேலை நாட்களையும் ஈடு செய்யும் வகையில், நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 25ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

8ஆம் வகுப்பு மாணவனுடன் பலமுறை உடலுறவு..!! போதையில் ஆசை தீர அனுபவித்த ஆசிரியை..!!

Fri Nov 10 , 2023
அமெரிக்காவில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நடுநிலைப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 2015இல் நடந்ததாகக் கூறப்படுகிறது. 31 வயதான மெலிசா மேரி கர்டிஸ் மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த போது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் நடந்த போது அந்த ஆசிரியருக்கு 22 வயதாகி இருந்தது. மறுபுறம் பாதிக்கப்பட்ட அந்த […]

You May Like