தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25 ரூபாய்க்கும், துவரம் பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு இலவசமாகவே வழங்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரேஷன் பொருட்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட இடங்களில் இம்மாதத்திற்கான குறைதீர் கூட்டம் அக்.14ஆம் தேதி நடைபெறவுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு / மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.