fbpx

Ration | ரேசனில் பொருட்கள் கிடைக்காது..!! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

தமிழ்நாடு அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு அபரிமிதமானது. தமிழக அரசும், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஊக்கத்தொகைகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதாவது, கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதேபோல, பண்டிகை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இருப்பதில்லை. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வேறொரு தினங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனினும், தங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதில்லை என்ற வருத்தம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இருந்து வரவே செய்கிறது. குறிப்பாக, பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாளை அதாவது 13ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா கூறுகையில், ”பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 2016இல் விற்பனை முனையங்கள் வழங்கப்பட்டன. அதனை மேம்படுத்தி வழங்க வேண்டும். எடை மோசடியை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.

பல மாவட்டங்களில் பொருட்களை ரேஷன் கடைகளில் இறக்க கட்டாய இறக்கு கூலி வசூலிக்கப்படுகிறது. பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.

Read More : Jothi Nirmalasamy | மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Chella

Next Post

ADMK | இரட்டை இலைக்கு சிக்கல்..!! வேறு சின்னத்தில் போட்டியிடும் அதிமுக..? அதிர்ச்சியில் எடப்பாடி..!!

Tue Mar 12 , 2024
இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி  திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு […]

You May Like