fbpx

Ration Shops | ’ரேஷன் கடைகளில் இனி பாமாயில் கிடைக்காது’..!! ’அதற்கு பதில் இந்த பொருள் தான் கிடைக்கும்’..!!

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், இலவச ரேஷன் அரிசியும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலை பலர் வாங்குவதில்லை.

அதை ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி, காசுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள். மேலும் பாமாயில் உடல் நலனிற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று பலர் கருதுகின்றனர். இதனால் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேங்காய் எண்ணெய் வழங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை உடலில் வெளிப்புறத்தில், தலையில் பூசுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. இதைவிட தென்னை விவசாயிகளும் பயனடைவார்கள் என விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எவ்வாறு வரவேற்பு அளிக்கிறார்களே அதை பொருத்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும் என அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அநேகமாக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், நீலகிரி என திசைக்கு ஒரு மாவட்டமாக தேங்காய் எண்ணெய் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

நேற்று மகன், இன்று தந்தை….! நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் சென்னையில் சோகம்….!

Mon Aug 14 , 2023
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், நேற்று மகன் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அதிகாலை தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன், நேற்று நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையில், அவருடைய தந்தை செல்வம் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது குடும்பத்தினரை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி […]

You May Like