fbpx

Tn Govt: 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும்…!

நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கடைகள் சரியான நேரத்தில் திறந்து பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல், பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!… இதுவரை 107 பேர் சுட்டுக்கொலை!… பாதுகாப்புப் படை அதிரடி!

Fri May 24 , 2024
Naxalites Killed: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பஸ்தார் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக மாநில காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த 7 நக்சலைட்டுகளை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரபாத் குமார் கூறியதாவது, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் […]

You May Like