அமெரிக்காவில் கொரோனாவை பரப்பும் எலிகளை உருவாக்கிய ஆய்வகம் பற்றிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தான் ஆய்வகங்கள் மூலம் கொரோனாவை பரப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆய்வகம் ஒன்று கொரோனா, எச்ஐவி, மலேரியா உள்ளிட்ட பல கொடிய நோய்க்கிருமிகளை உருவாக்கி வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
அமெரிக்காவின் பிரஸ்னோ நகரில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் பின்பகுதியில், சட்டவிரோத செயல் நடப்பதை அறிந்த அதிகாரிகள், திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை உறைய வைத்தன. பார்ப்பதற்கு குடோன் போல காட்சியளித்த அந்த இடத்தில், ஆய்வகம் செயல்பட்டு வருவது அப்போதுதான் தெரியவந்தது. அங்கு சுமார் 1,000 எலிகள் கூட்டமாக குண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் 200 எலிகள் ஏற்கனவே இறந்திருந்தது. உயிரியல் தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த எலிகள் கொரோனாவைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டவை என்பதும் பின்னர் தெரியவந்தது.
அத்துடன் அந்த ஆய்வகத்தில் 800-க்கும் மேற்பட்ட பெயர் தெரியாத கெமிக்கல்கள், ஆபத்தான மருத்துவக் கழிவுகள், 30-க்கும் மேற்பட்ட பிரிட்ஜ்கள், அவற்றுள் இருந்த ரத்தங்கள் போன்றவை அங்கு ஆய்வு செய்த அதிகாரிகளையே அதிர வைத்தது. அந்த ஆய்வகத்தில் பணியாற்றி வந்தவர்களோ தாங்கள் கொரோனா மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைக் கருவிகளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நெவேடா நகரில் இயங்கும் பிரெஸ்டிஜ் பயோடெக் என்ற பெயரில் இந்த ஆய்வகம் நடத்தப்பட்டிருப்பதும், ஆய்வகம் தொடர்பாக ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட முகவரிகள் பலவும் சீனாவில் உள்ள முகவரிகளாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆய்வகம் நடத்தப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஆய்வகங்களில் இருந்து ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆய்வகத்தின் செயல்பாட்டிற்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது தற்போது வரை மர்மமாகவே இருப்பதால் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.