புதிதாக திருமணம் செய்துகொண்ட ரவீந்தர் மனைவி மகாலட்சுமியை விட்டு பிரிந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக தகவலுடன் புகைப்படம் லீக் ஆகி உள்ளது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன் . புதியதாக திருமணம் ஆன ஜோடி இன்றுவரைட்ரெண்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் மனைவியை பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான போட்டோ ஒன்றும் வைரலாகி வருகின்றது.
திருமணத்திற்கு பின்னர் இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தலை தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக நான் மகாலட்சுமியை விட்டு பிரிய மாட்டேன் எனவும் கூறி வந்தார். ஒரு வேளை கலந்து கொண்டால் இருவரும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது என பேசப்பட்டு வந்தது. தற்போது ரவீந்தர் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்…