fbpx

RBI | வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இனி இந்த 2 வங்கிகளும் ஒன்றுதான்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

வங்கிகளுடைய செயல்பாடு மற்றும் நிதிநிலை பொறுத்து அதனுடைய ஆயுட்காலம் இருக்கும். வங்கியில் நிதி நெருக்கடியில் சிக்கினால் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். அதே போல வாடிக்கையாளர் சேவை குறைபாடு பிரச்சனைகள் இருந்தால், அபராதம் விதிப்பது, வங்கி உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்கும். பொதுவாக ஒரு வங்கி பலவீனமாக செயல்பட்டால், அதை பலமான மற்றொரு வங்கியோடு இணைக்கும்.

அந்த வங்கியை மீண்டும் புத்துயிர் பெற வைக்கும். அதே போல பலவீனமான இரண்டு வங்கிகள் இருந்தாலும் அதை ஒன்றாக இணைக்கும். இதுபோல வங்கிகள் இணைப்பது நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் வங்கி இணைப்பு நடைபெறவுள்ளது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இம்முறை Fincare Small Finance Bank Ltd மற்றும் AU Small Finance Bank Ltd ஆகிய இரண்டு வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன. இந்த இரண்டு வங்கிகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒன்றாக மாறிவிடும்.

Read More : சர்ச்சையில் சிக்கிய Village Food Factory யூடியூப் சேனல்..!! ஆபாச புகைப்படம் அப்லோட்..!!

Chella

Next Post

Edappadi Palaniswami | ’நாங்கள் நலமாக இல்லை’..!! திட்டம் தொடங்கிய உடனேயே கலாய்த்த எடப்பாடி பழனிசாமி..!!

Wed Mar 6 , 2024
‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்கிற புதிய திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், “தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு வந்து […]

You May Like