இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார்.
அதாவது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 6.05 சதவீதமாகவே தொடரும் என சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இ.எம்.ஐ. கட்டுபவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15% பங்களிப்பதாக தெரிவித்தார். மேலும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.