fbpx

மும்பையின் கோட்டையை உடைத்த ஆர்சிபி!. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேயில் வெற்றி!.

RCB VS MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேயில் மும்பையை RCB வீழ்த்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரஜத் படிதர் மற்றும் விராட் கோலியின் அரைசதங்களால் 221 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்களையும், ராஜத் படிடார் 32 பந்துகளில் 64 ரன்களையும், ஜித்தேஷ் ஷர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் வெற்றி பெற மும்பை அணிக்கு 222 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்தது. எனவே 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. இருப்பினும் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். மேலும் சூர்ய குமார் யாதவ் 26 பந்துகளில் 28 ரன்களையும் எடுத்தனர். எனவே மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அதே சமயம் அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் தனது 2வது அதிகபட்ச ரன்களை பெங்களூரு அணி இன்று பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக, ஒரு விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை பெங்களூரு அணி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேயில் மும்பையை RCB வீழ்த்தியுள்ளது.

Readmore: ‘அவர் ஒரு கொள்ளையர்’!. ஜாலியன் வாலாபாக்கில் உயிர் பிழைத்தவரை விமர்சித்த ஜெனரல் டயரின் பேத்தி!.

English Summary

RCB breaks Mumbai’s fortress!. Wins at Wankhede after 10 years!.

Kokila

Next Post

செவ்வாய்கிழமை எந்த தெய்வத்தை, எந்த நேரத்தில் வழிபட வேண்டும்…! முழு விவரம்….

Tue Apr 8 , 2025
Which deity should be worshipped on Tuesday and at what time...! Full details....

You May Like