லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைந்ததையடுத்து, ஸ்டாண்டில் இருந்த ஆர்சிபி ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து கம்பீர் சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 16வது சீசனின் 15வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.இந்த போட்டியில் டாஸ் லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி 212 ரன்கள் குவித்தது.அடுத்ததாக 213 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக பேட்டிங் செய்து வந்தது இறுதியில் லக்னோ அணி, கடைசி ஓவர் வரை த்ரில்லாக சென்ற போட்டியில், 9 விக்கெட்களை இழந்து, 213 ரன்கள் இலக்கை போராடி எட்டி, தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், லக்னோ அணியின் வெற்றியை அந்த அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் ஆக்ரோஷத்துடன் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. களத்தில் விளையாடிய வீரர்களை விட அவர் இந்த வெற்றியை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். இந்த போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது என்பதால் பெங்களூர் ரசிகர்கள் ஆர்.சி.பி… ஆர்.சி.பி என ஆக்ரோஷத்துடன் கூச்சலிட்டனர். இதனை பார்த்த கவுதம் கம்பீர் அமைதியாக இருக்கவேண்டும் என்று கை சைகையில் பெங்களூர் ரசிகர்களை பார்த்து காட்டினார். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.