தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்ற நடைமுறை அமலாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மினி லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்துதலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் தொற்று பாதித்தோரின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஒட்டப்படுகின்றன. தொற்று பாதித்தவர்கள் 14 நாட்கள் வரை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.