அடிக்கடி சிக்கன் எடுப்பது உடல் நலத்திற்கு கேடு என தெரிந்தவர்கள் அடுத்த தேர்வாக மட்டனை தேர்ந்தெடுக்கின்றனர். ஆட்டின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக சமைக்கப்படுகிறது. இதில் அதிக சத்துமிக்க ஒன்று ஆட்டு ரெத்த பொரியல்.
ஆட்டு ரத்தப்பெரியலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக விட்டமின் டி உள்ளதால் உடலில் இரத்தசோகை உள்ளவர்கள், இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம். மேலும் இதில் புரதம் உள்ளது. இதனால் தசைகளை கட்டியெழுப்புவதற்கும், சரிசெய்வதற்கும் உதவுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அல்லது அதிகம் புரதம் தேவைப்படும் நபர்கள் தாராளமாக ஆட்டு ரத்தத்தை உண்ணலாம். குறிப்பாக நமது முன்னோர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தார்கள், அதனால் தான் அவர்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக இருந்தனர்.
ஆட்டு இரத்தத்தில் ஆக்சிஜனேற்ற காரணிகள் உள்ளது. இதனால் உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். மேலும் இதில் துத்தநாகம் உள்ளதால் உடலில் நோயெதிர்ப்பு செயல்பாடு அதிகரிக்கும். காயம் போன்றவை விரைவில் குணமாகும். இதில் விட்டமின் பி12 இருப்பதால் உடலில் சிவப்பணு உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கும் உதவும். இவ்வளவு நன்மைகள் உள்ள ஆட்டு ரத்தத்தை எப்படி சமைப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆட்டு இரத்தம் : 250கி
பெரிய வெங்காயம் : 1
கொத்தமல்லி : 1/2 கொத்து
புதினா : 1/2 கொத்து
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 2-3
மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்
செய்முறை :
கடினமான வானொலியில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தற்போது புதினா மல்லி இலைகளை சேர்க்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இறுதியாக இரத்தத்தை சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூடான இரத்தப் பொரியலை பரிமாறலாம்.