பாலஸ்தீனத்தின் காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை நிகழ்த்திய படுபயங்கரமான குண்டுவீச்சுகளில் 500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். பின்னர் ஐநா சபை 1947இல் பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர். பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரத் தாக்குதலை நடத்திய ஹமாஸ் குழு, பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுவிக்க முன்வந்துள்ளது. காஸா மீதான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், அனைத்து பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க ஆயுதக் குழு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் படைகள் காசா பகுதியில் இராணுவத் தாக்குதல்களை நிறுத்தினால், ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.