fbpx

‘எனது வார்டு மக்களுக்காக என் தாலி செயினை கூட கழற்றி தர தயார்’..!! பொங்கி எழுந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில், தினசரி சந்தை கடைகள் இடித்த போது அதில் பழுதடைந்த பொருட்கள் ஏலம் விடுவது, நகராட்சிக்குட்பட்ட கட்டணக் கழிப்பிடம் டெண்டர், நகராட்சியோடு 7 ஊராட்சி இணைத்து விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது பேசிய 22-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி, “எனது வார்டில் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். போதிய நிதி இல்லாததால், அப்பணி தொய்வடைந்து உள்ளது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி இல்லையென்றால் எனது வார்டு மக்களுக்காக என் தாலி செயினை கூட கழற்றி தர தயாராக இருக்கிறேன்” என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து பேசிய நகர்மன்ற தலைவர் கருணாநிதி, “இப்படி உணர்ச்சிவசப்பட்டு தவறுதலாக பேசக்கூடாது” என அறிவுரை வழங்கி சாலை மற்றும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Chella

Next Post

கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மறுஆய்வு...! கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள்...!

Wed Nov 1 , 2023
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023, ஆகஸ்ட் 08 அன்று “ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் மறுஆய்வு” குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் 05 செப்டம்பர் 2023 ஆகவும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 19 செப்டம்பர் 2023 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வப்போது கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு […]

You May Like