fbpx

”தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்”..!! ஷாக் கொடுத்த முக.ஸ்டாலின்..!!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசு இந்தாண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை அரசு அமைதியாக இருந்துள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டதால், அதற்போது தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது” என குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அவை முன்னவர் துரைமுருகன், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பதிலளித்துப் பேசினார். இதற்கிடையே, முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசுகையில், ”நான்கூட எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமின்றி பேசமாட்டார் என்று நினைத்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இதை எதிர்த்துள்ளனர். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் உங்களுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் என்று உறுதி அளித்தோம்.

இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அது நாடாளுமன்றத்தில் பதிவாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை எங்களால் எப்படி தடுத்திருக்க முடியும்? மத்திய அரசு பெரும்பான்மையாக இருக்கும்போது எப்படி அவ்வாறு செய்ய முடியும்? எதிர்க்கட்சித் தலைவரும், காவிரி விவகாரத்தில் அதிமுக குரல் கொடுத்ததாக பலமுறை கூறியிருக்கிறார். அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை அதிமுக தடுத்து நிறுத்திவிட்டதா?

அதனால் நான் திரும்பத்திரும்ப கூறுகிறேன், எக்காரணத்தைக் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன். எனவே, தயவுகூர்ந்து, இந்த தனித் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார். அதிமுக – திமுக காரசார விவாதத்துக்குப் பின்னர், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Read More : ’விஜய் மணிப்பூர் வர தயாரா’..? ’பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்’..!! வெச்சி செய்த அண்ணாமலை..!!

English Summary

A separate resolution brought by the Tamil Nadu government against tungsten mining was unanimously passed in the Legislative Assembly.

Chella

Next Post

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.25,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Mon Dec 9 , 2024
An employment notification has been issued to fill the vacant posts of Project Assistant at Anna University.

You May Like