கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு வார்த்தைகள் அடிக்கடி உலாவி கொண்டிருக்கின்றன. யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தை பற்றிய கருத்துகள், ட்ரைலர் காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. தியேட்டர்களுக்கு சென்று பார்த்த பலரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளத்தில் இப்படம் வெளியானாலும், தமிழ்நாட்டில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு சில காரணங்களை சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதியை அதில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் தற்போது கொடைக்கானலுக்கு, குறிப்பாக குணா குகையை பார்வையிட படையெடுத்து வருகின்றனர். அவர்கள் குணா குகை பகுதியை பார்வையிட்டு, செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்ஃபி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கேரள குழுவினர் நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். தனியார் யூடியூப் சேனல் மூலம் நடைபெற்ற சிறப்பு படப்பிடிப்பிற்காக அவர்கள் வந்திருந்தனர்.
குறிப்பாக குணாகுகைக்குள் சென்று ஆபத்தான குழிக்குள் விழுந்த சுபாஷ் சந்திரன், குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றிய குட்டன் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது அவர்கள் குணாகுகை பகுதிக்கு நேரில் சென்று, 2006ஆம் ஆண்டு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையே, அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், நிஜ ‘மஞ்சுமல் பாய்ஸ்’ நண்பர்கள் குழுவினரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
Read More : Bread | அடேங்கப்பா..!! 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு..!! மிரள வைக்கும் கண்டுபிடிப்பு..!!