உத்தரகண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்கித் என்பவரின் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரிசார்ட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முதலில் உண்மை வெளிவரவில்லை. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
பின்னர் இருவரையும் விசாரித்ததில் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கிதாவிடம் புல்கித் பாலியல் தொழிலில் ஈடுபட கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த புல்கித் கொலை செய்து செல்போனையும் உடலையும் அருகில் இருந்த கால்வாயில் வீசியுள்ளனர். இதை அவர்களே கூறிய நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதையடுத்து கால்வாயில் தீயணைப்புத்துறையினர் உடலைத் தேடும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டனர். பல மணி நேரம் தேடப்பட்ட பின்னர் அவரது உடல் கிடைக்கவில்லை.இதனால் தேடலை கைவிட்டு பின்னர் இன்று காலை மீண்டும் பணியை தொடங்கினர் 7 மணி அளவில் உடல் கிடைத்தது. பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து முக்கிய குற்றவாளியான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டார். இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியது இவரது தந்தை வினோத் ஆர்யா பா.ஜ.க.வில் முன்னணி பிரமுகர். முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார். புல்கித்தின் சகோதரர் அங்கித் ஆர்யாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பெரும் சர்ச்சைக்குள்ளான அந்த ரெசார்ட்டை உடனடியாக இடித்துத் தள்ள அரசு உத்தரவிட்டது. இதனால் அங்கு புல்டோசர் கொண்டு வரப்பட்டு புல்கித் ஆர்யாவின் ரெசார்ட்டைஇடித்தனர். அங்கிதா காணாமல்போனது பற்றி முதலில் போலீஸ் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே வருவாய் போலீஸ் ஆய்வாளரையும் அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
