fbpx

’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரீசார்ஜ் கட்டணம் ரூ.5,000ஆக உயரும்’..!! பகீர் கிளப்பிய பிரதமர் மோடி..!!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ஆட்சியில் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் குறைவாக இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பாஜக ஆட்சியில் ரீசார்ஜ் கட்டணம் ரூ.400 – ரூ.500 ஆக உள்ளது என்றும் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4,000 – ரூ.5,000-க்கு குறையாமல் வரும் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரே கொள்கை “கொள்ளை” மட்டுமே’ என்றார்.

Read More : அடடே..!! இப்படியும் கூட வாக்களிக்கலாமா..? வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!

Chella

Next Post

UAE கனமழை எதிரொலி: 28 இந்திய விமானங்கள் ரத்து!

Wed Apr 17 , 2024
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில், நேற்று இரவு முதல் கனமழை பெய்து, மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் துபாய், சார்ஜா, குவைத்திலிருந்து செல்லும் 28 இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரசு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் அபுதாபி, ஷார்ஜா […]

You May Like