fbpx

சேப்பாக்கத்தில் ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப்!. ஜடேஜா – அஸ்வின் அபாரம்!. கங்குலி-சுனில் ஜோஷியின் சாதனை முறியடிப்பு!

IND VS BAN: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் மைதானம் வேகப்பந்து வீசக்கூடிய பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால், இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆறு ரன்களுக்கு நடையை கட்டினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுபம் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஃபெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 34 ரன்களுக்கு மூன்று பெரிய விக்கெடுகளை இழந்தது.

பின்னர் இளம் வீரர் எஸ் எஸ் வி ஜெய்ஷ்வாலுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். உணவு இடைவெளி வரை தாக்குப்பிடித்த இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோர் 96 இருக்கும்பொழுது அதிரடி வீரர் பந்த் விக்கெட்டை இழந்தது. பின்னர் இறங்கிய ராகுல் 16 ரன்களிலும் , எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் 56 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர். 144 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணிக்கு ஆபத்பாண்டவனாய் வந்த சீனியர் வீரர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் ஜோடி மீட்டெடுத்தனர். அஸ்வின் தனது ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் 102 ரன்கள் குவித்தார். அவரைப் போல ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 339 ரண்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் உள்ளது.

இதன்மூலம், , ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளனர். அதாவது, ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தனர், 2000ல் 121 ரன்கள் எடுத்திருந்த சவுரவ் கங்குலி மற்றும் சுனில் ஜோஷியின் முந்தைய சாதனையை முறியடித்தனர்.

அஷ்வினின் பேட்டிங் திறமைக்கும் ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் திறமைக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது. இந்த சாதனை ஒட்டுமொத்த அணியினரின் மன உறுதியையும் உயர்த்தியுள்ளது மற்றும் வரவிருக்கும் போட்டிகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த வேகத்தைத் தக்கவைக்க, அஷ்வின் மற்றும் ஜடேஜா செய்ததைப் போல ஒவ்வொரு வீரரும் முன்னேற வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Readmore: எச்சரிக்கை!. அரிசியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்தும்!. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

English Summary

Record Partnership in Batting: A-Jar

Kokila

Next Post

ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை... அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடியாக பறந்த உத்தரவு...!

Fri Sep 20 , 2024
The deadline for conducting school-level art festival competitions has been extended.

You May Like