fbpx

நெருங்கும் தேர்தல்…! சுற்றி வளைத்த அதிகாரிகள்…! கோடி கணக்கில் பணம் பறிமுதல்…!

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பின்னணியில் மிக அதிகமான பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவிலான பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே குஜராத்தில் ரூ. 71.88 கோடி மதிப்பிலான பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது ஒட்டுமொத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 27.21 கோடி பறிமுதல்களை விட அதிகமாகும்.

இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.50.28 கோடி, தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ.9.03 கோடியை விட இது ஐந்து மடங்கு அதிகம். மக்கள் விழிப்புடன் இருந்து cVigil செயலியை பரவலாகப் பயன்படுத்தினால் தேர்தலின் போது பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

10.11.2022 வரை குஜராத்தில் ரூ. 50.28 கோடியும், இமாச்சலப் பிரதேசத்தில் ரூ. 71.88 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதில் ரொக்கம், மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், விலையில்லா பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.

Vignesh

Next Post

SSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் தேர்வு...! முழு விவரம்....

Sat Nov 12 , 2022
மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிக்கு தேர்வு நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 35,557 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் என 13 மையங்கள் / நகரங்களில் 17 […]

You May Like