fbpx

TRB: 2,849 காலிப்பணியிடங்களுக்கு… இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்…! தமிழக அரசு அறிவிப்பு…!

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடன் வரவேண்டும்.

எழும்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ் பாடத்திற்கும், பள்ளி கல்வி துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆங்கில பாடத்திற்கும், சேத்துப்பட்டு MCC பள்ளியில் வணிகவியல் பாடத்திற்கும், அசோக் நகர் மேல்நிலை பள்ளியில் பொருளியல் பாடத்திற்கும், திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் மேல்நிலை பள்ளியில் கணக்கு பாடத்திற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இயற்பியல் பாடத்திற்கும் பணி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் லஞ்சத்தால் மூழ்கும் அரசு அலுவலகங்கள்!!! லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் 1.12 கோடி பறிமுதல்?

Sat Oct 15 , 2022
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் டாஸ்மாக் வசூலை மிஞ்சும் அளவுக்கு ஒரே நாளில் லஞ்சமாக வாங்கிய பணம் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், […]

You May Like