2022 டிசம்பரில் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இறுதி செய்துள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்டப் பதவிகள் அடங்கிய பல பதவிகளுக்கு தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் நடைபெற்றது.
இதை அடுத்து 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இறுதி செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்