fbpx

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! அதி கனமழை எச்சரிக்கை..!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலை புயலாக மாறலாம். இதன் காரணமாக சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும். மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! அதி கனமழை எச்சரிக்கை..!!

இதற்கிடையே, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச.8 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! அதி கனமழை எச்சரிக்கை..!!

டிச.9 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! அதி கனமழை எச்சரிக்கை..!!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று நள்ளிரவு முதல் வரும் வெள்ளிக்கிழமை மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், ரெட் அலர்ட் தற்போது விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..? எவ்வளவு தெரியுமா..? வெளியான மிக முக்கிய தகவல்..!!

Wed Dec 7 , 2022
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தியது. […]

You May Like