fbpx

பயங்கரம்…! இன்றும், நாளையும் ரெட் அலர்ட்…! 22 மாவட்டத்தில் கனமழை…!

அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

23-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 24-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

'ஜியோ ரயில் ஆப்' டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? யாரெல்லாம் முன்பதிவு செய்யலாம்!!

Mon May 20 , 2024
ஜியோ ரயில் செயலியானது, ஜியோ பயனர்களுக்கு மட்டும் பல வசதிகளுடன் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சேவையைப் பெற பயனர்களை அனுமதிக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்று முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதில் முதன்மையானது ரிலையன்ஸ் ஜியோ ஆகும். ஜியோவை நாடு முழுவதும் சுமார்46 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இன்று நாம் ஜியோ ரயில் செயலியைப் பற்றி பார்க்கலாம். இது உறுதிசெய்யப்பட்ட ரயில் […]

You May Like