fbpx

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது..!! சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!!

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறையில் உள்ளார்.

இதற்கிடையே, சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. எனவே, சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யகூடும் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி குமரேஷ் பாபு யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுதி நேரம் இது.

நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமான பேட்டி எடுப்பவர்களை முதலில் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த மனு மீது ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

Read More : மேலும் ஒரு அதிர்ச்சி..!! சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! தொழிலாளர்களின் நிலை..?

Chella

Next Post

10ஆம் வகுப்பில் தோல்வி..!! மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை..!! திருவள்ளூரில் சோகம்..!!

Sat May 11 , 2024
தமிழ்நாட்டில் 2023 – 24ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றிருந்தனர். இதற்கிடையே, தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில், […]

You May Like