fbpx

“முன்பதிவில்லா ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பா?. இந்திய ரயில்வே விளக்கம்!.

Indian Railways: முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என்றும், முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை எனவும் இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏ.சி. ரயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. சென்னை – மைசூர் காவிரி விரைவு ரயில், சென்னை – திருவனந்தபுரம் மெயில், சென்னை – ஆலப்புழா அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ஐந்து ரயில்களில் இருந்த நான்கு முன்பதிவு பெட்டிகளை இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டது.

அதேபோல், சென்னை – ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை – ஐதராபாத் அதிவிரைவு ரயில், சென்னை – நாகர்கோவில் அதி விரைவு ரயில், புதுச்சேரி – மங்களூரு விரைவு ரயில் உள்ளிட்ட எட்டு ரயில்களில் இருந்த நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை எனவும், அது ஆதாரமற்றவை என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2-ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் முதல் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ’ஆதரவு கேட்டு வந்தவரை அணைத்துக் கொண்ட சீமான்’..!! ’7 முறை கருக்கலைப்பு’..!! பாலியல் வழக்கில் செக் வைத்த ஐகோர்ட்..!!

English Summary

“Reduce the number of coaches in unreserved trains? Indian Railways explains!”

Kokila

Next Post

பஞ்ச கேதார தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோவில்.. வருடத்தின் பாதி நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்..!!

Sat Feb 22 , 2025
The shrine where Arjuna received the Pasupada Astra.. is open only for half the days of the year..!!

You May Like