ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய, ஏற்கனவே உள்ள ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, ஆட்டோ ரீஃபண்ட் எனப்படும் திருப்பிச் செலுத்துதல் நடைமுறையின் மூலம் வங்கிக் கணக்கிற்கு பணம் திரும்பச் செலுத்தப்படுகிறது.
பணம் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்யப்படாவிட்டால், ஐ.ஆர்.சி.டி.சி மறுநாள் தானியங்கி முறையில் பணத்தைத் திரும்பப் பெறும் செயல் முறையைத் தொடங்குகிறது. பொதுவாக பின் வரும் பரிவர்த்தனை முறையின்படி பணம் திரும்பப் பெறுவதற்கான கால அளவு அமையும்.நெட் பேங்க்கிங்,வாலட் அல்லது கேஷ் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு 3 முதல் 4 வேலை நாட்கள் ஆகும். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 6 முதல் 7 வேலை நாட்கள் ஆகும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.