fbpx

கால்பந்தாட்ட வீராங்கனை உடலை வாங்க மறுப்பு…. உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு….

கால்பந்தாட்ட வீராங்கனை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி  சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்டத்தின்போது முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு உணர்விழப்பு நடைபெற்றது. கடந்த 8ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரியாவின் பெற்றோர் இயற்கைக்கு மாறான மரணம் என்று பெரவள்ளூர் போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வீராங்கனை பிரியாவின் உடல் பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடலைவாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தின் முன்அமர்ந்மு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Post

#சென்னை : திருமண நாள் அன்றே மர்ம முறையில் மணமகன் இறப்பு.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

Tue Nov 15 , 2022
சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.  வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]

You May Like