fbpx

வாவ்…! அரசு திட்டத்தில் இலவச வீடு…! 31-ம் தான் கடைசி நாள்…! கட்டாயம் வழங்க வேண்டும் என உத்தரவு…!

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து 2021 – 2022ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அந்தந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக மத்திய அரசால் இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டது. அதில் அனுமதி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை, ஆவாஸ் பிளஸ் கணக்கெடுப்பின்படி பயனாளி வாரியாக சரிபார்த்து, மீதம் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலில், இணையதளத்தில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களான வேலை அடையாள அட்டை எண் மற்றும் இனம் மாற்றம் குறித்து தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள தளர்வுகளை பயன்படுத்தி, வீடு கட்டுவதற்கு உரிய ஆணைகள் இன வாரியாகவும், அனுமதிக்கப்பட்ட பட்டியல்படி முழுமையாகவும் வழங்கபட்டுள்ளதை உறுதி செய்து, கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

பயனாளிகள் பட்டியல், ஊராட்சி மன்ற அலுவலக வெளிப்புறச் சுவரில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அனுமதி ஆணை வழங்கப்படாது. நிலுவையில் உள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு , நிரந்தர காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு 31.1.2023க்குள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். மேலும் 1.2.2023 அன்று வழங்கப்படாது நிலுவையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை, மத்திய அரசால் திரும்ப பெறப்படும்.

இதனை கிராம சபையில் விவாதித்தல், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, நிரந்தர காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட மாநில அளவிலும், வட்டார அளவிலும், கிராம ஊராட்சி அனாவிலும் அமைக்கப்பட்ட பணிக்குழுக்கள் மூலம் நிலமற்ற பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழக்கும் வகையில், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள ஆட்சேபனை அற்ற அரசு, புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சிக்கு சொந்தமான பொது நிலங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஆதி திராவிட நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அவற்றின் தளவமைப்புகள், நிலமற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் 12.12.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இத்துறையின் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, ஆகாஸ் பிளஸ் வீடு வழங்கும் திட்டம் (மறு கணக்கெடுப்பு), புதிய குடிசை கணக்கெடுப்பு ஆகியகணக்கெடுப்பு பட்டியல்களையும் செம்மைப்படுத்தும் பட்டியல்களில் இடம் பெறாத குடிசைகள், நிலைத்த தன்மையற்ற, வாழத் தகுதியற்ற வீடுகளில் வாழும் குடும்பங்களை கணக்கெடுக்கவே அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விமான பயணிகளுக்கு இது நடந்தால்.. டிக்கெட் கட்டணத்தில் 75% திருப்பி செலுத்தப்படும்.. புதிய அறிவிப்பு..

Thu Jan 26 , 2023
விமானங்கள் ரத்து, விமானங்கள் தாமதம் போன்ற காரணங்களால் பயணம் செய்ய முடியாத விமானப் பயணிகளுக்கான விதிகளில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) திருத்தம் செய்துள்ளது. விமானத்தில் ஏற மறுக்கப்பட்டாலோ, விமானங்கள் ரத்து செய்யப்படுவதாலோ, அல்லது விமானங்களில் தாமதம் ஏற்படுவதாலும் பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) திருத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அதைவிட குறைவான […]

You May Like