fbpx

ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து; போலீசார் வெளியிட்ட வீடியோ… இணையதளத்தில் வைரல்..!

புதுடெல்லி, மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த வீடியோ ஒன்றை டெல்லி காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர். சாலை விழிப்புணர்வு குறித்தும் ஹெல்மெட் அணிவது பற்றியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “ஹெல்மெட் அணிபவர்களை கடவுள் காப்பாற்றுவார்” என்று பதிவிட்டு டெல்லி காவற்துறையினர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் இருந்து ஒரு கார் சாலையின் மறுபுறம் கடக்க முயற்சிக்கிறது. அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. வேகமாக மோட்டார் சைக்கிள் வந்தவர்வந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் இழுத்துக்கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் மோட்டார் சைக்கிள் சாலையின் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்தார் அதனால் தலையில் அடிபடமாமல் உயிர் தப்பினர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீடப்பட்ட பிறகு அந்த நபர் சாலையில் இருந்து எழுந்தார்,அப்போது, மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலை மத்தியில் இருந்த மின் விளக்கு கம்பம் சரிந்து நேராக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரின் தலை மீது விழுந்தது. ஆனால், அந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் மின் விளக்கு கம்பம் விழுந்ததில் அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து அங்கே பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரே விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் இரண்டு முறை உயிர்பிழைந்த அதிர்ஷ்ட சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Rupa

Next Post

தீண்டாமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள... முடியாது டிடிவி தினகரன் டுவிட்...!

Sun Sep 18 , 2022
சென்னை, தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது;- தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மிகவும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல், […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்..!!

You May Like