fbpx

பத்திரப்பதிவு முறைகேடு.. இதே நிலை தொடர்ந்தால்.. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது..

தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.. அதில் ” தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசிடம் முறையாக அங்கீகாரம் பெறாத மனைகளை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.. உரிய அங்கீகாரம் பெறாத மனைகளை மோசடியாக மனைகளில் விற்பனை செய்வதுடன், அரசுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ள நிலையில், தேனியில் சார்பதிவாளராக பணியாற்றும் உஷா ராணி என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு
செய்து வருகிறார்..

எனவே முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும்.. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கோரியிருந்தார்.. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..

அப்போது நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.. மேலும் எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதே நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்..

தொடர்ச்சியாக முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரை பணி இடை நீக்கம் செய்து, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் பத்திரப்பதிவு டிஐஜிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. இந்த வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..

Maha

Next Post

அதிரடி காட்டிய சச்சின்..! சாலை பாதுகாப்பு தொடரில் அசத்தல் ஆட்டம்..! ரசிகர்கள் உற்சாகம்..!

Tue Sep 20 , 2022
நீண்ட வருடங்களுக்குப் பின் சச்சின் டெண்டுல்கரை பேட்டும் கையுமாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என 8 நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய லெஜெண்ட்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்தியா […]
அதிரடி காட்டிய சச்சின்..! சாலை பாதுகாப்பு தொடரில் அசத்தல் ஆட்டம்..! ரசிகர்கள் உற்சாகம்..!

You May Like