fbpx

பான் கார்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்..? பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி 31ஆம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பல சேவைகளுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பான் கார்டு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்படத் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 2-வது ஆட்சி காலத்தின் கடைசிப் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பான் கார்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்..? பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய-மாநில அரசுகள் அங்கீகரித்த குறைந்தது 20 வெவ்வேறு ஐடிகள் உள்ளன. இதில், நிரந்தர கணக்கு எண்ணை அனைத்து செயல்முறைகளுக்கும் பிரத்யேக தொழில் அடையாளமாக மாற்றுவதற்கான சட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம். ஒரு நபர் அல்லது நிறுவனம் தங்களது பான் கார்டை தற்போதுள்ள வேறு ஏதேனும் அடையாளங்களுடன் இணைக்க அனுமதிக்கும் விதியை இச்சட்டம் உள்ளடக்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

Chella

Next Post

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் எலக்ட்ரிக் கார்…! : ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் ஓடும் தெரியுமா…!

Fri Jan 13 , 2023
சீனாவின் BYD நிறுவனம், புதிய எலக்ட்ரிக் செடான் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் அடைந்துவிடும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் என செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் எலக்ட்ரிக் செடான் காரின் […]

You May Like