fbpx

வெள்ள அபாய எச்சரிக்கை…! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம்…!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8,409 கன அடியாக உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8,409 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு 4,242 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு முழுவதும் பெய்த கன மழையால் 8,409 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.15 அடியாக உள்ளது (மொத்தம் 24 அடி) ஏரியில் இருந்து வினாடிக்கு 3,009 கன அடிக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 4 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஏரியில் இருந்து 6000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

மிக்ஜாம் புயல் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் சமயத்தில் கடுமையான வானிலை நிலவக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த 5 பழக்கங்கள் இருக்கா.? உங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கலாம்.!

Mon Dec 4 , 2023
மூளை என்பது மனித உடலில் ஒரு இன்றியமையாத உருவாகும். ஏனெனில் உடலின் அனைத்து செயல்களும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளை சீராக இயங்கினால் மொத்த உடலும் அதன் கட்டளையின்படி சீராக செயல்படுகிறது. மூளையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட உடலின் ஒவ்வொரு அசைவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில செயல்கள் நமது மூளையின் இயக்கத்தை பாதிக்கின்றன. அப்படியான ஐந்து கெட்ட பழக்கங்களை பற்றி இந்த பதிவில் […]

You May Like