fbpx

ஓடிடி, தியேட்டரில் இன்று (ஏப்.5) ரிலீஸ் ஆகும் படங்கள்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

இன்று (ஏப்ரல் 5, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கள்வன்

கள்வன் – இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு ‘அக்சஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனுமான ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வொயிட் ரோஸ்

வொயிட் ரோஸ் – இயக்குனர் கே ராஜசேகர் இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி, ஆர்.கே சுரேஷ் என பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரஞ்சனி ‘பூம்பாறை முருகன் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இப்படத்திற்கு சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.

தி பேமிலி ஸ்டார்

தி பேமிலி ஸ்டார் – இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் என பலர் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

வல்லவன் வகுத்ததடா

வல்லவன் வகுத்ததடா – இயக்குனர் விநாயக் துரை இயக்கத்தில் தேஜ் சரண்ராஜ், அனன்யா மணி, ராஜேஷ் பாலச்சந்திரன், ஸ்வாதி மீனாட்சி என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தை இயக்குனர் விநாயக் துரை தயாரிக்க, இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

இரவின் கண்கள்

இரவின் கண்கள் – இயக்குனர் சுரேஷ் குமரன் தானே இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் இவருடன் இணைந்து டோலி ஐஷு, கிரி திவாரக்கிஷ், அழகு ராஜா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரதாப் தயாரிக்க, இசையமைப்பாளர் சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.

டபுள் டக்கர்

டபுள் டக்கர் – இயக்குனர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா, முனீஷ்காந்த் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சந்துரு தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

ஹனுமான் – டிஸ்னி ஹாட்ஸ்டார்

ஹனுமான் – தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகி இந்தாண்டு முதல் வெற்றி படமாக கொண்டாடப்பட்ட திரைப்படம். இப்படம் தற்போது தமிழ் மற்றும் பல மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.

இ மெயில் – டென்ட்கோட்டா

இ மெயில் – இயக்குனர் எஸ்.ஆர்.ராஜன் தானே இயக்கி தயாரிப்பாளராக பணியாற்றி உருவாக்கியிருக்கும் திரைப்படம். இப்படத்தில் அசோக் குமார், ராகினி, ஆதவ் பாலாஜி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜூபின் மற்றும் அவினாஷ் கவாஸ்கர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ஆலகாலம்

ஆலகாலம் – இயக்குனர் ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், தங்கதுரை, பாபா பாஸ்கர் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Read More : ”திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்”..!! விஜய் கட்சியின் அறிக்கை உண்மைதானா..? பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

ஊருக்குள் உலா வரும் சிறுத்தை..!! இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை..!! மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு..!!

Fri Apr 5 , 2024
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில், செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கவனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறுத்தை அங்கிருந்து 3 கிமீ தொலைவை நேற்றிரவு கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கியுள்ளது. […]

You May Like