fbpx

’போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து நீர்திறப்பு’..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை முக.ஸ்டாலின் வழங்கினார்.

’போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து நீர்திறப்பு’..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

அதில், “மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், போதிய முன்னறிவிப்பின்றி, மக்கள் எதிர்பாராத நேரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். அவ்வாறு தங்க வைக்கப்படும் மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்க வழிவகை செய்து தர வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

’போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து நீர்திறப்பு’..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

சில இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் வீணாவதாக செய்திகள் வருகின்றன. எனவே, நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூடிவைக்க வேண்டும். நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்களுக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கனமழையால் பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் மாவட்ட அதிமுகவினர்..! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!

Thu Aug 4 , 2022
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸை அதிமுகவிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like