fbpx

வெறும் ரூ.16,499-ல் ஜியோ புக் லேப்டாப், அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!… முழு விவரம் இதோ!

ரூ. 16,499 விலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அட்டகாசமான லேப்டாப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோ புக் லேப்டாப்பின் வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஜியோ லேப்டாப்பை இன்று அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக அக்டோபர் 2022 இல் வெளியான லேப்டாப்பை விடவும் இது எடை குறைந்ததாக இருக்கிறது. அனைத்து தரப்பு லேப்டாப் பயனாளர்களை கவனத்தில் கொண்டு இந்த லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. மொத்தமே 990 கிராமுக்கு குறைவாக அதாவது ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ் 11.6 இன்ச். எல்.இ.டி. டிஸ்ப்ளேவை கொண்டது.

2 மெகா பிக்சல் வெப்கேம் வீடியோ கால் சேவையை எளிதாக்குகிறது. கனெக்டிவிடியை பொருத்தளவில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளன. ஒரு மினி HDMI போர்ட், 3.5 mm ஹெட்போன் ஜேக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிடத்தகுந்த வகையில் 4ஜி LTE சிம் கார்டு மூலம் வைபை கனெக்சனை ஏற்படுத்திக் கொள்ள முடியும். 2.0 GHZ Octa Core Processer உடன் 4 ஜிபி RAM மெமரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் நீடிக்க கூடிய பேட்டரில் இதில் இருப்பதால் சார்ஜிங், பவர் கட் குறித்த கவலைப்பட வேண்டியது இல்லை. இன்டர்னலில் 64 ஜிபி ஸ்டோரைஜை கொண்டுள்ளது. இதனை 256 ஜிபி வரைக்கும் உயர்த்திக் கொள்ளலாம். பொழுதுபோக்கு அம்சங்களுடன், வீடியோக்கள், சி,சி ப்ளஸ் ப்ளஸ், ஜாவா, பைதான், பியர்ல் போன்ற சாஃப்ட்வேரையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜியோ மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் தளங்களில் இந்த லேப்டாப்பை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

Kokila

Next Post

தூள்...! ஆசிரியர்களுக்கு டிசம்பர் 2023 வரை 6 மாத காலத்திற்கு ஊதியக் கொடுப்பாணை...! தமிழக அசத்தல் அறிவிப்பு...!

Tue Aug 1 , 2023
பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்கள் 2012-13 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மற்றும் நகராட்சி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) வெளியீடு. 900 முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ தற்காலிக பணியிடங்களுக்கு ஜுலை 2023 முதல்‌ டிசம்பர்‌ 2023 முடிய ஆறு […]

You May Like