fbpx

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை..? விரைவில் அறிவிப்பு..!!

சென்னைக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூ. 6000-க்கு இணையாக தென் மாவட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவர்களுக்கான ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்

இந்நிலையில், தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஆகையால், சென்னைக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000-க்கு இணையாக தென் மாவட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

தொடர் மழை, வெள்ளத்தால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்..!! 1,000 பயணிகள் தவிப்பு..!!

Mon Dec 18 , 2023
கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அங்கங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து இரவு சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூர் – நெல்லைக்கு இடையே ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளம் மூழ்கியதால் […]

You May Like