fbpx

மதங்களும் வேறு!… காரணங்களும் வெவ்வெறு!… தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்?… சுவாரஸ்ய தகவல்!

இந்துக்களை தவிற பிற மதத்தவரும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் ஹிந்து புத்தாண்டாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்த இராமன், இராவணனை வதம் செய்து மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்திக்கு திரும்பிய நாளை தீபாவளி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாட வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. நரகாசுரனை கண்ணன் வதம் செய்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதிகாலை எழுந்து தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடும் பண்டிகையாகும். வாழ்வில் இருளைப் போக்கி ஒளிமயமாக்குவதே தீபாவளியன்று விளக்குகள் ஏற்றி வைக்கக் காரணமாகும். உயிர்களின் மூலமான சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் விதத்தில் விளக்குகள் ஏற்றி வைக்கப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியை சிவபெருமான் தமது சரிபாதியாகக் கொண்டு அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுத்ததை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் ஹிந்து புத்தாண்டாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி மகாலட்சுமிக்கு பிரசித்தி பெற்ற தினமாகும். சுத்தமான வீட்டிற்குள் லட்சுமி வருவாள் என்ற நம்பிக்கையால் தீபாவளிக்கு முன்னதாக வீடுகளை சுத்தம் செய்து செல்வத்தை வழங்கும் மகாலட்சுமியை வரவேற்கிறோம். வணிகர்கள் இந்நாளில் விநாயகரை வணங்கி புதுக்கணக்கு தொடங்குவர். ஒடிசா மாநிலத்தில் தீபாவளியன்று இறந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் உள்ளது. மேற்கு வங்கத்தில் தீபாவளி முன்னிட்டு காளி பூஜை நடத்தப்படும்.

இந்தியா தவிற இந்திய வம்சாவளியினர் வாழும் நாடுகள், முற்காலத்தில் இந்திய மன்னர்கள் ஆட்சி செய்த நாடுகள் ஆகியவற்றிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, மியான்மர், கயானா, மேற்கிந்தியத்தீவுகள், பிஜி உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்துக்களை தவிற பிற மதத்தவரும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். சமண மதக் கடவுள் மகாவீரர் இந்த நாளில் தான் நிர்வாணம் எனப்படும் மோட்சத்தை அடைந்ததாக நம்பப்படுகிறது. இதனால் மகாவீரரின் நினைவாக சமணர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். இதே போல, சீக்கியர்களும் திபாவளி பண்டிகையை ’பண்தி சோர் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைப்பிடியில் இருந்து தப்பிய நாள் இதுவாகும். மேலும், இதே நாளில் தான் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Kokila

Next Post

துயரத்தின் உச்சம்!… சேவையில்லாமல் போன மிகப்பெரிய மருத்துவமனை!... 3 குழந்தைகள் பலி!

Sun Nov 12 , 2023
இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலால் கடும் பாதிப்படைந்த காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையில் சேவையில்லாமல் போனதால் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரினால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை […]

You May Like