சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான எண்ணெய்களில் பாமாயிலும் ஒன்று. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் எண்ணெயாக பயன்படுத்தப்பட்டது. மலேசியா, இந்தோனேசியா மற்றும் பல ஆப்பரிக்க நாடுகள் பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பாமாயில் வழங்கப்படுகிறது. இதை சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சிலர் வாங்கி பயன்படுத்துவதே இல்லை, காரணம் இதை சமையலுக்கு பயன்படுத்தினால் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால்தான். இது மட்டுமல்லாமல் இதில் நிறைய கொழுப்பும் இருக்கின்றன. கொழுப்புகள் நம் உடலுக்கு தீமை விளைவிக்கும், உடல் எடையை கூட்டும், கொலஸ்டிராலை அதிகரிக்கும். இதய வால்வுகளில் அடைப்புகளை ஏற்படுத்தும். இதனாலையே பாமாயில் பயன்படுத்த மக்கள் தயங்குகிறார்கள்..
இந்த நிலையில் பாமாயிலை வீட்டிலேயே சுத்தப்படுத்தி அதில் உள்ள பித்தத்தை போக்கிவிடலாம் என்கிறார்கள். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் மிதமான தீயில் இரும்பு கடாயை வைத்து அதில் வாங்கி வந்த பாமாயிலை ஊற்றுங்கள். எண்ணெய் சூடாகும் போது கொட்டை இல்லாத புளி, கல் உப்பு, சின்ன துண்டு இஞ்சி ஆகியவை இந்த முறை்கு தேவைப்படுகிறது.
இதில் புளியை உருட்டிக் கொண்டு அதன் நடுவே உப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த புளியை வடை போல் தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இஞ்சியை போட வேண்டும். இவற்றையெல்லாம் போட்டு 5 முதல் 10 நிமிடங்களை வரை அப்படியே கொதிக்கவிடவும். புளி, இஞ்சி ஈரத்தன்மை கொண்டிருப்பதால் அது பொறிந்து கொண்டே இருக்கும். எனவே அருகில் நிற்கும் போது ஜாக்கிரதையாக நிற்க வேண்டும். இந்த சலசலப்பு அடங்கியதும் எண்ணெயயை இறக்கி ஆறவிடவும். இதை சுத்தமான பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ளலாம். அப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும். அந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read more ; தகாத உறவு.. கணவன், குழந்தையைக் கொன்று புதைத்த மனைவி..!! – 5 ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்