fbpx

ஆஸ்துமா, மார்பு சளி, மூச்சுவிட சிரமம் போன்றவைகளுக்கு எருக்கன் செடி இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க.!

பொதுவாக ஒரு செடியில் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருந்தால் அந்த செடி மருத்துவ குணங்கள் மிகுந்ததாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளை எருக்கன் செடியின் பூ, இலை, வேர் என அனைத்துமே நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருக்கிறது.

எருக்கன் செடியில் தண்டை உடைத்து பார்த்தால் அதிலிருந்து வெள்ளை நிற பால் வடியும். முள் குத்தினாலோ அல்லது ஏதாவது காலில் குத்தி நீர் கோர்த்தாலோ, இந்த பாலை அதில் வைத்தால் முள் குத்திய வலியும் சரியாகும். நீர் கோர்த்த கட்டியும் உடைந்து கெட்ட நீர் வெளியே வரும்.

ஆஸ்துமா, மார்புச் சளி, சுவாசக் குழாயில் பிரச்சனை, மூச்சு விட சிரமம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த எருக்கன் செடியின் இலைகளை பறித்து நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்து வந்தால் நோய் விரைவாக குணமடையும். சூடு கட்டிகள் மற்றும் கொழுப்பு கட்டிகள் உடலில் வரும்போது இந்த இலையை அரைத்து சாறு எடுத்து கட்டிகள் தடவி வந்தால் கட்டி உடைந்து வலி குறையும்.

எருக்கன் இலைகளின் சாறு எடுத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி ஏற்படும் போது கொடுத்து வந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான படை, சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு எருக்கன் இலையை சாறு எடுத்து மஞ்சள் தூள் இரண்டையும் கடுகு எண்ணெயில் காய்ச்சி தடவி வந்தால் தோல் பிரச்சனை சரியாகும்.

வசம்பு, பெருங்காயம், லவங்கம், பூண்டு மற்றும் எருக்கன் இலையின் சாறு 5 கிராம் அளவிற்கு எடுத்து காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறு பாம்பு மற்றும் எலி கடிக்கு மருந்தாக பயன்பட்டு விஷம் முறிவை ஏற்படுத்துகிறது. மேலும் காதில் வலி மற்றும் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த சாறு உபயோகப்படும்.

Baskar

Next Post

இந்தியாவில், மனிதர்கள் இந்த இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.! ஏன் தெரியுமா.!?

Tue Feb 13 , 2024
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளுக்கும் மனிதர்கள் எளிதாக செல்லக்கூடிய நவீன வசதியும் வந்துவிட்டது. அப்படியிருக்க உலகில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மனிதர்கள் செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிக்கு மனிதர்கள் கண்டிப்பாக செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் என்பதை குறித்து பார்க்கலாம். 1. இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடசென்டினல் […]

You May Like