fbpx

குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றதா.! வீட்டு வைத்தியத்திலேயே சரி செய்யலாம்.!?

பொதுவாக பெரியவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது என்று பலர் கூறுவதை பார்த்திருப்போம். தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவு பழக்க வழங்கத்தினால் குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு எளிமையான வீட்டு வைத்திய முறையிலேயே எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

முதலில் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நோய் இருந்தால் உடனடியாக மருத்துவர் அணுகி அதற்கேற்ற தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் மலச்சிக்கல் பிரச்சனை மூல நோய்க்கு அறிகுறியாக கருதப்படுகிறது. குழந்தைகளின் வாழ்க்கை முறை ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவு, பெற்றோர்களின் ஜீன்களின் வழியாக நோய் தாக்குதல், போன்ற பல்வேறு காரணங்கள் மூல நோய் வருவதற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது.

ஒரு சில குழந்தைகளுக்கு ஆங்கில மருத்துவ முறைகளின் படி மருந்துகள் கொடுத்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகாது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்கு தரலாம். மேலும் கடுக்காயை மிகவும் குறைந்த அளவு அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பொதுவாக உடலில் நீர் பற்றாக்குறையின் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இதற்கு போதுமான அளவு குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் தருவது அல்லது பழங்களின் சாறு தருவது மலச்சிக்கல் பிரச்சினையை உடனடியாக குணப்படுத்தும். மேலும் நல்லெண்ணையை குறைந்த அளவு குடிக்க கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யலாம்.

Rupa

Next Post

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்.! இவ்வளவு நோய்களை தீர்க்குமா.!

Thu Feb 1 , 2024
பிரம்ம கமலம் மலர் என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இமாச்சலப் பிரதேச பகுதிகளில் பூக்கும் அரிதான தாமரை பூவின் ஒருவகையாகும். இமாலய மலர்களின் ராஜா என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் மலர் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் அழகாகவும், மோசமான வாசனையுடையதாகவும் இருக்கும். பிரம்ம கமலம் மலர் பல நோய்களை தீர்த்து வந்ததால் இந்த மலர் பூப்பதை பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் பல சித்தர்களும் இந்த மலரை […]

You May Like