fbpx

கண்களை சுற்றி கருவளையம் என்று கவலையா.. இதை பண்ணுங்க போதும்.!?

பொதுவாக கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் முகத்தில் இருக்கும் முழு அழகையும் கெடுத்து விடும். கருவளையம் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையால் அதிகரிக்கிறது. கருவளையம் பிரச்சனை முகத்தின் அழகை கெடுப்பதால் பலருக்கும் இதனால் தன்னம்பிக்கை குறைகிறது.

தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் இரவு நேரங்களில் கூட தூங்க முடியாமல் பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது மற்றும் ஒரு சில உணவுப் பொருட்களை உண்ணும் போது முகத்தில் கருவளையம் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றங்களோடு, ஒரு சில டிப்ஸ்களையும் பாலோ செய்தால் கருவளையம் முற்றிலும் நீங்கி விடும்.

தினமும் பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ தூங்குவதற்கு முன்பாக தக்காளி சாறு, தயிர் மற்றும் கடலை மாவு கலந்த கலவையை ஃபேஸ் பேக் போல முகத்தில் போட்டு வரலாம். வெயிலில் செல்வதற்கு முன்பாக வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி உள்ள க்ரீம்களை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்.

மேலும் தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக பாதாம் மற்றும் பாலாடை கலந்து அரைத்து கண்களை சுற்றி உள்ள கருவளையத்தில் தடவி வர வேண்டும். வெயில் காலத்தில் தக்காளியை ஜூஸ் ஆக குடித்து வந்தால் உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புது செல்கள் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒரு சில குறிப்புகளின் மூலம் கண்ணில் உள்ள கருவளையத்தை எளிதாக வீட்டிலேயே நீக்கலாம்.

Rupa

Next Post

சூப்பர்..!! ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை..!! பிப்.7ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Feb 3 , 2024
சிவகங்கை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட வாரியாக ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இங்கு […]

You May Like