ஒரு சிலர் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, திடீரென கால் சுண்டி இழுத்துவிடும். இந்த பிரச்சனையை நம்மில் பலர் சந்தித்து இருப்போம். இந்த பிரச்சனை தூங்கும் போது மட்டும் இல்லாமல், நடக்கும் போது, எழுந்திருக்கும் போது என பல நேரங்களில் கால் நரம்புகள் இழுத்துக் கொள்ளும். இதனால் தாங்க முடியாத வலி ஒன்று ஏற்படும். அந்த வகையில் இப்படி கால் நரம்பு சுண்டி இழுப்பதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
இது போன்ற பிரச்சனைகள், பொதுவாக வயதானவர்கள், ஒட்டப்பந்தைய வீரர்கள், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவர்கள், வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு தான் மற்றவர்களை விட அதிகம் இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகளுக்காக நாம் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த பிரச்சனையை நாம் நமது உணவின் மூலமே சரி செய்து விடலாம்.
அந்த வகையில், உங்களுக்கு கால் நரம்பு அடிக்கடி இழுத்து பிடித்தால், நீங்கள் வாழைக்காய், உருளைக்கிழங்கு, வேர்கடலை, காராமணி போன்ற வாயுக்களை அதிகப்படுத்தும் உணவுகள் சாப்பிடுவதை குறைதுக்கொள்ள வேண்டும். நீங்கள் இது போன்று கால் இழுத்துப் பிடிக்காமல் இருக்க, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைக்காமல் இருப்பது, குளிர்ந்த நீரில் குளிப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காராமல் இருப்பது, அதிக காரம் மற்றும் துவர்ப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்ற பழக்கங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலும், இந்த பிரச்சனை வாயு காரணமாக தான் ஏற்படுகின்றது. எனவே சிறிதளவு விளக்கெண்ணையை நாக்கில் படும்படி வைத்து வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை ஏற்படுவது கட்டுப்படும். மேலும், அடிக்கடி இளநீர் குடிப்பது, வாழைப்பழம் சாப்பிடுவது, ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ஆகிய உணவுகள் சாப்பிடுவதாலும் இந்த பிரச்சனை குணமாகும்.
முடிந்த வரை இரவு தூங்குவதற்கு முன்பு, வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு கால் பாதங்கள் மீது அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது நல்லது.
Read more: இந்த ஒரு துவையல் போதும்; 80 வயசு ஆனாலும் உங்களுக்கு மூட்டு வலியே வராது!!!