கண் திருஷ்டி என்பவரது ஒருவரது வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். அதனால் தான், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில், போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகில் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் மற்றவர்கள் பொறாமை எண்ணம் கொள்வதும் சிலரது வளர்ச்சியை கண்டு கண் திருஷ்டி வைப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது.
ஒருவர் மீது கண் திருஷ்டி விழுவதால் அவருக்கு உடல் உபாதைகள் எதிர்மறை சிந்தனைகள் பசியின்மை மற்றும் மன உளைச்சல் போன்றவை ஏற்படலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் சிலருக்கு விபத்துக்கள் கூட நிகழலாம் என எச்சரிக்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள். எனவே, இது போன்ற கண் திருஷ்டிகளில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள உதவும் சில பரிகாரங்களை பார்ப்போம்.
கண் திருஷ்டியில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு கண்ணாடி பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் உப்பு போட்டு உப்பிற்கு நடுவே எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும். மேலும், நான்கு மூலைகளிலும் காய்ந்த மிளகாயை குத்தி வைக்க வேண்டும். இதனை வீட்டின் வரவேற்பறையில் பார்வையில் படும்படி வைக்கவும். இவை வீட்டிற்கு வருபவர்கள் நம்மீது வைக்கும் கண் திருஷ்டி அனைத்தையும் நீக்கிவிடும். வாரம் ஒரு முறை இதனை மாற்றி வைக்க வேண்டும்.
மேலும், வாரம் ஒரு நாள் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு நோக்கி உட்காரச் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஒவ்வொருவரின் தலையை சுற்றியும் மூன்று முறை சுற்றிய பின் தண்ணீரை வாஷ்பேஷனில் ஊற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இது போன்ற பரிகாரங்கள் மற்றவர்கள் கண் திருஷ்டியால் நமக்கு இருக்கும் தீங்குகளை நீக்கிவிடும் என ஜோதிட வல்லுநர்களும் சாஸ்திரத்தில் கைதேர்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.