fbpx

விரைவில் வருகிறது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..!! எதற்காக..? யாருக்காக தெரியுமா..?

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரங்களில் உள்ள வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் வகையில் முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 72 தொகுதிகளைச் சார்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை பற்றி விளக்கம் அளிக்க, ஜனவரி 16ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்ப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..!! எதற்காக..? யாருக்காக தெரியுமா..?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஏறத்தாழ 30 கோடி மக்கள் வாக்களிக்காத நிலை காணப்பட்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்களிக்க முடியாததும் இதற்கு காரணம். இந்நிலையில், பொதுமக்களின் வாக்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. மேலும், சட்டத்தில் தேவையான மாற்றங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாக்களிக்கும் முறை அல்லது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தொழில்நுட்பம், வேறு ஏதேனும் இருந்தால், உள்நாட்டு புலம்பெயர்ந்தோருக்கான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து ஜனவரி 31ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்துப்பூர்வ கருத்துக்களை ஆணையம் கோரியுள்ளது.

Chella

Next Post

"தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாது" பிரதமருக்கு ஸ்டாலின் ஆறுதல்..

Fri Dec 30 , 2022
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மோடியின் […]

You May Like