fbpx

“23 ஆபத்தான நாய்” இனங்களுக்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்.!! கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி எம்.நாகபிரசன்னா அடங்கிய ஒற்றை நீதிபதி பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் பங்குதாரர்களிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதனை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

நடைமுறை குறைபாடுகளை மேற்கோள் காட்டிய நீதிபதி நாகபிரசன்னா தடை முன்முழியப்படுவதற்கு முன் பங்குதாரர்கள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை என்பதை மேற்கோள் காட்டினார். மேலும் இந்த தடைக்கு பொறுப்பான அமைப்பு விலங்குகள் வதை சட்டத்திற்கு முரணானது எனவும் தனது தீர்ப்பின் கூறி இருக்கிறார்.

மனிதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ரோட்வீலர் மற்றும் மாஸ்டிஃப்ஸ் உள்ளிட்ட 23 இன நாய்களின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தை தடை செய்யுமாறு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை மூலம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் இன்றி இந்தியா முழுவதும் இந்த தடையை விதித்திருப்பதன் மூலம் ஒன்றிய அரசு அதிகாரத்தை மீறியதாக நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. மேலும் இனப்பெருக்கம் மற்றும் நாய்கள் தொடர்பான இறப்பு சம்பவங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக உயர் நீதிமன்றம் தலையிட்டு, சட்ட நடைமுறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

மத்திய அரசு வழங்கிய தடையை நீக்கி இருப்பதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள நாய் வளர்ப்பவர்கள் மற்றும் வளர்ப்பு பிராணி ஆர்வலர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது. குறிப்பிட்ட இன நாய்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளால் எழுப்பப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான நிபுணர் குழுவை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைத்துள்ளது.

Kathir

Next Post

பாஜகவில் இணைந்தார் வைகோவின் மருமகன்..!! மதிமுகவின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி..!!

Thu Apr 11 , 2024
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் […]

You May Like