fbpx

”எனது கீழாடையை கழற்றி… அந்தரங்க உறுப்புகளை தொட்டு”..!! இது பாலியல் சீண்டல் இல்லையாம்..!! அது என்ன 10 வினாடி..?

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த 17 வயது இளம்பெண், 2022 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். தனது வகுப்பறைக்கு மாடிப் படிக்கட்டில் அவர் ஏறிச்சென்றபோது, திடீரென யாரோ தன்னை பின்பக்கமாக தொடுவது போலவும், தனது கீழாடையை கழற்றுவது போலவும் மாணவி உணர்ந்துள்ளார். உடனே அதிர்ச்சியுடன் அவர் திரும்பி பார்த்தபோது, அவரை பார்த்து சிரித்த பள்ளியின் காவலாளி, “அன்பே, விளையாட்டுக்காக இப்படி செய்கிறேன் என்று உனக்கு தெரியும்” என்றுக் கூறி அசடு வழிந்துள்ளார்.

காவலாளியின் இந்த பேச்சை கேட்டு கோபமடைந்த மாணவி, பள்ளி நிர்வாகியான அன்டோனியோ அவோலா என்பவரிடம் புகார் அளித்துள்ளார். மாணவியின் சம்மதமின்றி, அவரை தான் சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, வேடிக்கைக்காகதான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறியுள்ளார். பள்ளி மாணவியை காவலாளி சீண்டிய விவகாரம், நீதிமன்றம் வரை சென்றது. மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காவலாளியை சில தினங்களுக்கு முன் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் ரீதியாக சீண்டி உள்ளார். அதை குற்றமாக கருத முடியாது” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இத்தாலி மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை விமர்சித்து ‘கொஞ்ச நேரம் தொடுதல்’ என்ற தலைப்பில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்த தீர்ப்பு குறித்து மாணவி கூறுகையில், இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகமும், நீதிமன்றமும் தமக்கு அநீதி இழைத்துவிட்டதாக கருதுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். “இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படவில்லை. இதன் மூலம், நாட்டின் நீதி பரிபாலன முறையை நம்பியது தவறு என்பதை உணர தொடங்கி இருக்கிறேன்” என்று மாணவி கூறியுள்ளார். மேலும் “சத்தம் போடாமல் என் அருகில் வந்து பின்புறமாக என்னை தொட்ட காவலாளி, எனது கீழாடையை இழுத்துவிட்டு, என்னை இறுக பற்றித் தூக்கி, அந்தரங்க உறுப்புகளை தொட்டுத் துன்புறுத்தியுள்ளார். இது ஒன்றும் வேடிக்கையான விஷயம் அல்ல. வயதான ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் இப்படியெல்லாம் விளையாடக் கூடாது” என கூறி உள்ளார்.

Chella

Next Post

மாற்றுச் சாவி வைத்து பீரோவை திறந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்..!! அமைச்சர் பொன்முடி வீட்டில் பரபரப்பு..!!

Mon Jul 17 , 2023
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில் பீரோ சாவி இல்லாததால் சாவி செய்யும் தொழிலாளியை அழைத்து வந்து மாற்று சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்துள்ளனர். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கௌதம் சிகாமணி எம்பி வீட்டிலும் […]

You May Like