ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன அவற்றை பூர்த்தி செய்வதற்காக அந்நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி ரெப்கோ நிறுவனத்தில் மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கல்வி தகுதியாக ஏதேனும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு உச்சபட்ச வயது வரம்பு 28 ஆகும். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக மாதம் ரூ. .49,800/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.04.2023.. விண்ணப்பதாரர்கள் personnel@repcohome.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்ப படிவங்களை அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக அனுப்பும் விண்ணப்பதாரர்கள் உதவி பொது மேலாளர் (HR)
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் 3வது தளம், அலெக்சாண்டர் சதுக்கம் புதிய எண். 2/பழைய எண். 34 & 35
சர்தார் படேல் சாலை, கிண்டி
சென்னை – )600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய மற்ற விவரங்களை அறிய repcohome.com என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.