fbpx

பலமுறை பலாத்காரம்..!! 4 முறை கருக்கலைப்பு..!! காதல் மனைவியை கழற்றிவிட்டு ஓடிய கணவன்..!!

திருப்பூர் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்த பால்ராஜ் – வசந்தா ஆகியோரின் மகள் பரிமளா (வயது 31). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், கடந்த 2019இல் சதீஷ்குமார் என்பவருடன் பழக்கமாகி, பின்னர் அவரை காதலித்து வந்த நிலையில், ஒன்றரை ஆண்டு காலம் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சதீஷ்குமார் வேலை நிமித்தமாக சவுதி அரேபியா சென்ற நிலையில், 2022ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பி வந்த சதீஷ்க்கு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி வரை திருப்பூரில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சதீஷ் குடும்பத்தினர், சதீஷை திருப்பூரில் இருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

சொந்த ஊர் வந்த சதீஷ் பரிமளாவிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர், பலமுறை சதீஷை தொடர்பு கொண்ட பரிமளா, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவரை மீட்டுத் தருமாறு புகாரளித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், புதுக்கோட்டை வ.உ.சி நகரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து, தனது கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், தன்னை பலமுறை கற்பழித்ததாகவும், திருமணம் ஆகிய 3 ஆண்டுகளில் நான்கு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், சதீஷை தன்னிடமிருந்து குடும்பத்தினர் தான் இருக்கிறார்கள் என்றும், குடும்பத்தினரிடமிருந்து தனது கணவர் சதீஷை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டுச் சென்றனர். மேலும் சதீஷ் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, பரிமளா குடும்பத்தினர் சதீஷை பிரித்து விட்டனர் என்று கூறுவது முற்றிலும் தவறானது. பரிமளாவை விட்டு பிரிவது சதீஷின் தனிப்பட்ட விருப்பம். மேலும் இது குறித்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, குடும்பத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.

Read More : அனைத்து விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

Alleging that he had raped her several times and had four abortions in the three years of their marriage, Satish’s family kept him away from her.

Chella

Next Post

2026-ல் அதிமுக ஆட்சி… உட்பகை கொண்டவர்கள் இனி தேவையில்லை… தியாகம் செய்ய நான் இருக்கிறேன் -எடப்பாடி பழனிசாமி…

Tue Oct 15 , 2024
AIADMK rule in 2026... Enmity people are no longer needed... I am here to sacrifice - Edappadi Palaniswami...

You May Like